சீமானின் அந்தர்பல்டி.. சற்றும் எதிர்பாரா எடப்பாடி!! குதூகலத்தில் பாஜக தலைமை!!

0
140
seemans-interbaldi-unexpected-edappadi-bjp-leadership-in-a-frenzy
seemans-interbaldi-unexpected-edappadi-bjp-leadership-in-a-frenzy

ADMK NTK: பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு முக்கிய காரணம் திமுக – வை முழுவதுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எண்ணித்தான். மேற்கொண்டு எடப்பாடியும் பாஜக வுடன் கூட்டணி வைக்க பல கட்டுப்பாடுகளையும் போட்டுள்ளார். இந்த கூட்டணியால் தான் அண்ணாமலையும் பதவியை இழக்க நேரிட்டது. இது ரீதியாக ஆரம்பக் கட்டத்திலிருந்தே பாஜக திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில்இறங்கியது.

இதனால் சீமானை தன் வசப்படுத்த, அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே பாஜக முயற்சித்து வந்தது. ஆரம்ப கட்டத்தில் இவர்கள் கூட்டணி உறுதியென கூறி வந்த நிலையில் நாங்கள் தனித்து தான் போட்டு விடுவோம் யாருடனும் கூட்டணி இல்லை என்று சீமான் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து பாஜக அதிமுகவை வைத்து கூட்டணிக்குள் இணைக்க அடுத்த திட்டத்தை போட்டது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவே சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இந்த பேச்சு வார்த்தையினால் தான் எடப்பாடி குறித்து சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் அதிமுக ரீதியாகவும் இணக்கம் காட்டி வருகிறார். இவர்கள் பேச்சு வார்த்தையில் தற்போது வரை எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்களாம். தொகுதி பங்கீடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் இது ரீதியாக அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதற்குள் அதிமுக சீமானை கூட்டணிக்குள் இணைத்து விடும் என கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Previous articleஉடல் சூட்டை குறைக்கும் சோம்பு!! இப்படி சாப்பிட்டால் 10 நன்மைகள் தாராளமாக கிடைக்கும்!!
Next articleதிருமா-வை பட்டென கவிழ்த்த அன்புமணி.. பாஜக – வை எகிறியடிக்கும் பாமக!!