seeman: சீமான் தாயார் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் தமிழ் தேசிய அரசியலை முன் எடுத்து செல்லும் கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. இந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கிறார். திராவிட அரசியலை முற்றலும் எதிர்த்து வரும் இருவர். தற்சார்பு பொருளாதார வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பிரச்சார மேடைகளில் அதிக அளவில் பேசி வருகிறார்.
தமிழக அரசால் வழங்கப்படும் இலவசங்களை முற்றிலும் எதிர்த்து வருகிறார். குறிப்பாக மத்திய அரசாங்கத்தினால் நீர் நிலையங்களை தூர்வாரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக எதிர்த்து வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளாக மாற்றி வருகிறது என்று கூறி வருகிறார்.
இந்த திட்டத்தினால் விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. விவசாய உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது என எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என்றால் jcb போன்ற இயந்திரங்களை கொண்டு அந்த வேலைகளை செய்ய முடியும் எனக் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் சீமான் தயார் அன்னம்மாள் தங்களது கிராமத்திற்கு 100 நாள் வேலை வாய்ப்பு வேலை திட்டம் வேண்டும் என்று தனது கிராம மக்களுடன் சென்று சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறார். மேலும் அலுவலர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உங்களது கிராமத்தில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்த பிறகு கிளம்பி சென்றார்.