கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்!
கணவனை இழந்த பெண்களுக்கு பல சலுகைகள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுயதொழில் முனைவோர்களாக மாற வழிகாட்டுகிறார்கள். இது தொடர்பாக இந்தியன் ஊரக வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் புதுப்புது பயிற்சி வகுப்புகள் நிறுவப்பட்டு அதில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது.
இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில், ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளை, சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை இணைந்து 1980 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தர்மஸ்தலா அருகே ‘ஊரக வளர்ச்சி மற்றும் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம்’ என்பதை உருவாக்கியது. அதன் சுருக்கமான RUDSETI ஐ உருவாக்கி ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டது.
மேலும் இது தொடர்பாக பயிற்சி வகுப்பு பற்றி வருகை புரிந்த பெண்கள் கூறுகையில், இந்தப் பயிற்சி வகுப்பு முற்றிலும் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள். பயிற்சிக்கு வருபவர்களுக்கு மூன்று வேளை தரமான உணவு அளிக்கப்படுகிறது. அந்தந்த பயிற்சி வகுப்புக்கு உரிய உபகரணங்கள் தரப்படுகிறது. எளிமையான முறையில் அனைத்து வகுப்புகளும் உள்ளது.மேலும் முறைப்படி புரியும்படி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.