திமுகவை தொடந்து கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
சுமார் 3 மணி நேரங்கள் அவர்கள் என் வீட்டில் இருந்தும் போலீசர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார்கள். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.. அவரின் வீட்டில் நடந்த இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமான், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதன்பின் ஊடகங்களில் பேசிய சவுக்கு சங்கர் ‘ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டு. இது திருவேங்டம் என்பவருக்கு தெரியும். அதனால்தான், சென்னை கமிஷனர் வருண் அறிவுரைப்படி திருவேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இத நான் ஊடகங்களில் சொன்னதால் அவரின் வலியுறுத்தல்படியே என் வீட்டை சூறையாடியதோடு, வீட்டில் மலக்கழிவுகளை கொட்டியிருக்கிறார்கள். இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் வருணுக்கும் தொடர்பு உண்டு ’ என பகீர் புகார் கூறினார்.
இந்நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டா என விசாரிக்கும்படி பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருக்கிறது. ஒருபக்கம், சவுக்கு சங்கருக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்கவுள்ளது.