பள்ளிப் பருவத்தில் இருந்து தனக்கு நண்பர்கள் கிடையாது என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் அவர்கள்.
லிட்டில் டாக்ஸ் youtube சேனலுக்கு பேட்டி அளித்த செல்வராகவன் அவர்கள் பேசியதாவது :-
நட்பு வட்டாரம் என்பது எனக்கு சிறுவயதிலிருந்தே அமையவில்லை. உண்மையில் சொல்லப்போனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று நினைக்கிறேன். ஊட்டியில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ரூம் போட்டு ஜாலியாக இருப்பதை பார்க்கும் பொழுது, நாம் இதையெல்லாம் மிஸ் செய்து விட்டோமோ என்று நினைத்து அதிகம் வருத்தப்பட்டுள்ளேன்.
அதற்கான காரணம், நான் சிறுவயதிலிருந்தே வேலை வேலை என்று ஓடியதால் இப்பொழுது வரை எனக்கென ஒரு நண்பர் இல்லையென்று வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த வயதிற்கு மேல் என்னால் சென்று யாரிடமும் நட்பு பாராட்ட முடியாது என்றும் செல்வராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிறைய நண்பர்கள் வாரத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொண்டு பேசுகிறார்கள்;ஜாலியாக இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் தனியாகத்தான் உட்கார்ந்து இருக்கிறேன்.அவர்களை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பேசுகையில், என்னுடைய மகன் ரிஷிதான் தற்போது எனக்கு உற்ற நண்பனாக இருக்கிறான். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவனிடம் சென்று விடுவேன். முதல் இரு குழந்தைகளுக்கும் என்னால் அவ்வளவு நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால், இவனுடனான நேரத்தை மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்துதான் தற்பொழுது பிரேக்கை எடுத்துக்கொண்டேன் என்றும் youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
முன்னதாக நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடன் உதவியாளராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓம்கார், லீலாவதி மற்றும் ருத்ராக்ஷ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.