“ஆயிரத்தில் ஒருவன் படத்த அப்பவே கொண்டாடி இருந்தா…. நானும்…” செல்வராகவன் ஆதங்கம்!

0
191

“ஆயிரத்தில் ஒருவன் படத்த அப்பவே கொண்டாடி இருந்தா…. நானும்…” செல்வராகவன் ஆதங்கம்!

செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மற்றும் அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். ஜி வி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 2010 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலிலும் தோல்விப் படமாக அமைந்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த படத்துக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. இணையத்தில் அந்த படத்தை பார்த்து பலரும் பாராட்ட ஒரு முறை சென்னையில் அந்த படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்போது சோழர்களின் கதையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சோழர்களைப் பற்றி முதல் முறையாக படம் இயக்கியவர் செல்வராகவன்தான் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பற்றி பேசியுள்ள அவர் “ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை அப்போதே கொண்டாடி இருந்தால் நானும், அந்த படத்தின் சில பாகங்களை உடனடியாக எடுத்திருப்பேன்.” என வருத்தத்தோடு பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தற்போது நானே வருவேன் திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் தற்போது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article“ஆட்டநாயகன் விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்…” கே எல் ராகுல் ஓபன் டாக்
Next article3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்!