மீண்டும் இணையும் செல்வராகவன் & கலைப்புலி தாணு…. தனுஷ் இருக்காரா?

0
183

மீண்டும் இணையும் செல்வராகவன் & கலைப்புலி தாணு…. தனுஷ் இருக்காரா?

இயக்குனர் செல்வராகவனுக்கு கடந்த சில ஆண்டுகள் மிக மோசமான ஆண்டுகளாக அமைந்தன. அவர் இயக்கிய இரண்டாம் உலகம் மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. இதையடுத்து அவர் இப்போது நடிப்பிலும் நுழைந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அவர் நானே வருவேன் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கி முடித்துள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடித்துள்ளார். வழக்கமாக செல்வராகவன் படங்கள் போல இல்லாமல் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் செல்வராகவனின் வேலைத்திறனைப் பார்த்து வியந்துள்ள தயாரிப்பாளர் தாணு மீண்டும் தனது நிறுவனத்துக்கு ஒரு படத்தை இயக்க செல்வராகவனிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous article“வடசென்னை 2 எப்போது…” வெளியான லேட்டஸ்ட் தகவல்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!
Next articleயுடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவன்… குடித்த நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனை