G Pay பாஸ்வேர்டு இல்லாமலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்!! இதோ ஈஸி டிப்ஸ்!!
ஒரு நாளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணம் பரிமாற்றத்தை டிஜிட்டல் முறையில் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜி பே மற்றும் போன் பே தான் தற்பொழுது நடப்பில் அதிக புழக்கத்தில் உள்ளது.இதை பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.
அனுப்பும் ஒரு நம்பர் மாறிவிட்டாலே நம் அனுப்பும் பணமானது வேறொருவருக்கு சென்று விடும். இதிலிருந்து நாம் முறையாக பார்த்து தான் ஜிபி மற்றும் போன் பே உபயோகிக்க வேண்டும்.அந்த வகையில் ஜி பே வில் அதன் பாஸ்வேர்டு இல்லாமலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ஜி பே செயலிக்குள் முதலில் செல்ல வேண்டும்.
பிறகு அதில் இருக்கும் அப்ளை என்பதை தொட வேண்டும்.
பின்பு அதில் ஆட் என்ற இடத்தில் நீங்கள் அனுப்பும் ரூபாயை கொடுக்க வேண்டும்.
நீங்கள் அதில் ஒரு ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலுத்திக் கொள்ளலாம்.
இதற்குப் பின் கீழே இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து எந்த நபர் என்ற விளக்கத்தை கொடுத்து விட்டால் போதும் பணம் யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு சென்று விடும்.
ஜிபே பாஸ்வேர்ட் இல்லாமலேயே பணம் அனுப்புவது அவசர காலகட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் இது நாம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வது மற்றொரு அசௌகரியம் தான்.