ADMK: எடப்பாடி தொடர்ந்து கட்சி ரீதியாக புறக்கணிப்பு செய்வதால் செங்கோட்டையன் சசிகலாவுடன் கூட்டு வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அடுத்த பெரிய நிர்வாகி வெளியேறும் நிலை தற்பொழுது உண்டாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்ப கட்டத்திலிருந்து மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை ஒதுக்கி வருவதுதான். அந்த வகையில் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவரின் முக்கியத்துவமானது கட்சி சார்ந்து குறைத்துக் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டலம் என்றாலே செங்கோட்டையன் என்ற நிலை மாறி தற்பொழுது முன்னாள் அமைச்சர் எ வே வேலுமணி பெயர்தான் இடம்பெற்றுள்ளது.
அதேபோல ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு செயலாளராக அமைப்பது குறித்து அதிருப்தியில் இருந்து உள்ளார். இதனையெல்லாம் தாண்டி இவருக்கு பின்வந்த அமைச்சர்களான உதயகுமார் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோருக்கு பதவி கொடுத்ததில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. தனக்கும் முதலமைச்சர் பதவி வந்த பொழுது அதனை வேண்டாம் என்று ஒதுங்கி வழி விட்ட என்னை இப்படி கட்சியில் புறக்கணிப்பு செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்துள்ளாராம்.
அதன் வெளிப்பாடு தான் உச்சகட்டமாக பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்தது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட திருப்பூர் தொகுதிக்கு எந்த வேட்பாளரை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யவில்லை என்றும் மேற்கொண்டு அது குறித்து அறிவிப்பு கூட இவருக்கு தெரிவிக்கவில்லையாம். அதேபோல அவரது தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவுக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துவிட்டு அவருக்கு கீழ் மூத்த நிர்வாகியான என்னை செயல்பட சொன்னது இக்கட்டான சூழல் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு எடப்பாடியை எதிர்க்கும் விதத்தில் சசிகலாவுடன் கூட்டணி வைக்க தனது ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கொண்டு எடப்பாடி சமாதானம் படுத்த நினைத்தாலும் கட்சி ரீதியான இவர் மீதுள்ள புறக்கணிப்பு இருந்து கொண்டே தான் இருக்கும் என கூறுகின்றனர்.