ADMK TVK: அதிமுகவை ஒருங்கிணைப்பு வேண்டும் என்று யார் கொடி தூக்கினாலும் அவர்களை கட்சியை விட்டு எடப்பாடி வெளியேற்றி விடுகிறார். அந்த வகையில் கொங்கு பகுதியில் மிகவும் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் செங்கோட்டையனும் தற்போது கட்சியை விட்டே நீக்கிவிட்டார். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவை பார்த்து வரும் இவருக்கே கட்சிக்குள் இந்த நிலைமையா என்று பலரும் வசைப்பாடி வருகின்றனர்.
ஆனால் இவரை கடந்து அதிமுக செயல்படுவது என்பதும் சற்று கடினம் தான். கொங்கு மணடலத்தில் இவருக்கு உள்ள செல்வாக்கை வைத்து எளிமையாக ஓட்டுக்களை பெற்றுவிடலாம். ஆனால் இவருக்கு மாற்று என போட்டால் கள அளவில் அதிக வேலை செய்ய வேண்டி இருக்கும்.
மேலும் கட்சிக்குள் தனது குரல் எடுபடாததால் அவருக்கு எதிராக பலத்த கூட்டணி அமைக்க வேண்டும் என செங்கோட்டையன் விரும்புகிறார். அதனால் பலரும் இவருடன் கூட்டு பேச்சுவார்த்தனை நடத்தி வந்தனர். ஆனால் கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய்க்கு இப்படி ஒரு அரசியல் பிரவேசம் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. வரும் மாதத்தில் விஜய்யுடன் கட்சியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்படி அதிமுகவிலிருந்து வெளியேறி தேமுதிகவின் விஜயகாந்த்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் ஓர் வழிகாட்டியாக இருந்தாரோ, அதேபோல கத்துக்குட்டிக்கு சொல்லிக் கொடுத்த பெரிய பொறுப்பில் அமர நினைக்கிறார். ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றாலும் இவருக்கென்று அந்தஸ்தான பதவி அதாவது (முதல்வர்) பொறுப்பில் சம பங்கு கேட்டுள்ளாராம்.

