ADMK: அத்திக்கடவு அவிநாசி திட்டம் சார்பாக எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர் அந்த நிகழ்ச்சியிலிருந்தே மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு விரிசல் போக்கானது உண்டாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மூத்த நிர்வாகியான தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கிடைக்க வில்லை என்பது தான் செங்கோட்டையனின் புலம்பலாக உள்ளது. இவர்களுக்குள் உட்கட்சி மோதல் உள்ளது என்பதை பேச்சிலேயே அறிய முடிந்தது.
மேற்கொண்டு இவர் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வரும் நாட்களில் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனிடையே பாஜக அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் செங்கோட்டையனையும் சமாதானம் படுத்தினர். அதேபோல உட்கட்சி மோதல் இருந்தாலும் கட்சிக்கு ஆதரவாக சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து தனது பங்களிப்பையும் கொடுத்தார்.
இப்படி இருக்கையில் ஒரு சில இடங்களில் ஆர்வம் காட்டாமலேயே செங்கோட்டையன் இருந்து வருகிறார். குறிப்பாக அதிமுக பாஜக இணைந்தது சார்பாக விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் இதில் கலந்து கொள்ளவில்லை. மேற்கொண்டு பாஜக அழைப்பு விடுத்தவர்கள் அனைவரும் வந்தார்களா என்பது குறித்து கிராஸ் செக் செய்துள்ளது.
இதில் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் உடனடியாக பாஜக தலைமை செங்கோட்டையனை அழைத்து பேசியுள்ளது. தற்போது தான் கட்சி ஒன்று பட்டுள்ளது, மீண்டும் கட்சிக்குளிருந்து கொண்டு வேறுபாட்டை காட்டாதீர்கள். இது நல்லதல்ல என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைக் கேட்டுக் கொண்ட செங்கோட்டையன் இன்று சட்டசபையில் தனது பேச்சை ஆரம்பிப்பதற்கு முன் நல்லாட்சி புரிந்த எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களின் வழியில் அதனைத் தொடரும் எடப்பாடியாரை வணங்கி உரையை தொடங்குகிறேன் என இவர் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவின் தலைமை சொல்லுக்கு கட்டுப்பட்டு செங்கோட்டையன் நடந்து கொண்டிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.