பள்ளிகள் திறப்பது எப்போது? – விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன்

Photo of author

By Parthipan K

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

ஜுன் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டான 2020 – 21ல் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மத்திய அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என கூறிய நிலையில் தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளியான பிறகுதான் பள்ளிகள் திறப்பதை குறித்து ஆலோசிக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் காலதாமதமாக பள்ளிகள் தொடங்குவதால் மாணவர்களுக்கு பாடங்களை குறைப்பது குறித்து கல்வியியல் வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.