இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!!

Photo of author

By Parthipan K

இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!!

திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கரை இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னையில் இன்று கைது செய்தனர்.

இவர் பல்வேறு கோவில்கள் மற்றும் எண்ணற்ற ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இந்துத்துவா சொற்பொழிவாளரான இவர், பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் இந்துத்துவா சித்தாந்தங்களை பரப்புகின்ற சொற்பொழிவாளராக வலம் வருகிறவர். கடந்த சில நாட்களாக ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி அவர் என்ன பேசினார் என்றால் இவர் பெரியார் குறித்தும், அம்பேத்கர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் போது விழாக்களில் பேசியுள்ளார். அவர் பேசிய கருத்துக்கள், பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இவர் பட்டியலின சமூக மக்கள் குறித்து பேசிய வீடியோக்களை கண்ட நெட்டிசன்கள், மணியனை கைது செய்ய வேண்டும் என்று கண்டன குரல் எழுப்பி வந்தனர். சிலர் இணையதளம் வாயிலாக புகார் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை மாம்பலத்தில் உள்ள மணியன் அவர்களின் வீட்டில் நேற்று நள்ளிரவில் தி.நகர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்களின் கைது நடவடிக்கைக்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொருபுறம் அவர்களின் கைது நடவடிக்கைக்கு, சரி என்றும் காவல்துறையினருக்கு பாராட்டும் என தெரிவித்து வருவதுக்கு குளிப்பாட்டத்தக்கது.