முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு!

0
220
Seniors with disabilities worry no more! Prepare to vote from home!
Seniors with disabilities worry no more! Prepare to vote from home!

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு!

வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் ,நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் கூறுகையில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தேவையான அளவு துணை ராணுவ படையினர் திரிபுரா வந்தடைந்துள்ளார்.மேலும் திரிபுரா முழுவதும் ரோந்து பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.திரிபுரா மாநிலத்தில் சட்டவிரோத பணபுழக்கம் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்டவை தடுக்க 14 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின் பொழுது 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார். திரிபுரா,மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous articleவைகை புயல் வடிவேலுவின் தாயார் மறைவு! திரையுலகினர் இரங்கல்!
Next articleஇல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் உயரும் பால் விலை.. வெளிவந்த புதிய தகவல்!