சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

திருமுல்லைவாயில் அருகில் அயப்பாக்கம் ஐயப்பன் நகர் ஓம்சக்தி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் ஆட்டோ ஓட்டுனர் இவருடைய மனைவி அபிராமி இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பாக்கியராஜின் நண்பர் பிரதீப் அவர்களும் பாக்கியராஜும் சாலையில் அமர்ந்து மது குடித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியைச் சார்ந்த மக்கள் திருமுல்லைவாயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் அதன் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார்கள் காவல்துறையினர்.

இந்த சூழ்நிலையில், மது குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள். அப்போது பாக்யராஜ் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றால் பாட்டிலை உடைத்து நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று காவல்துறையினரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அதனால் அதன்படி பீர் பாட்டிலால் பாக்கியராஜ் காவல்துறையினரின் கண்முன்னால் மதுபோதையில் பீர் பாட்டிலை உடைத்து இருக்கின்றார். மதுபோதையில் பாக்கியராஜ் இவ்வாறு செய்கிறார் என்று காவல்துறையினர் நினைத்தாலும் அதனை தடுக்க முயற்சி செய்தார்கள். இந்த நேரத்தில் பீர் பாட்டிலை எடுத்து தன்னுடைய கழுத்தில் பாக்கியராஜ் குத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை கண்ட காவல்துறையினரால் அதிர்ச்சியடைந்து பாக்யராஜை உடனடியாக மீட்டு அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த நிலையில், ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் பாக்கியராஜ் மரணமடைந்தார். இது தொடர்பாக திருமுல்லைவாயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாக்யராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக பாக்கியராஜ் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் பாக்கியராஜின் இறப்பிற்கு மற்றொரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஆட்டோ ஓட்டுனர் பாக்கியராஜ் வைத்திருந்த ஐபோன் ஒன்றை காவல்துறையினர் பிடிங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் காவல் துறையினருக்கும் ஆட்டோ ஓட்டுனர் பாக்கியராஜ் அவர்களுக்குள் தகராறு உண்டாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகதான் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து கழுத்தில் குத்தி கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது0 இருந்தாலும் அந்த தகவலை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை விசாரணைக்குப் பின்னர் தான் பாக்கியராஜின் இறப்பிற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள இயலும் என்று தெரிவிக்கிறார்கள்.