பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

Photo of author

By Pavithra

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

Pavithra

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் 30 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே வெங்கந்தூர் கிராமத்தில் அரசு பள்ளியில்,நேற்று மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாத்திரையை உட்கொண்ட சில நிமிடங்களிலே சுமார் 30 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் -க்கு தகவல் தெரிவித்து அனைத்து குழந்தைகளையும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிள்ளது.குழந்தைகள் மயங்கி விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை.