ADMK: அதிமுகவில் எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே உரசல் போக்கானது ஆறு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது என பலரும் நிம்மதி அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மீண்டும் உட்க்கட்சிக் குள்ளேயே மோதல் போக்கானது தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி ரீதியான ஆயத்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் எடப்பாடி, மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற பரப்புரை செய்து வருகிறார். இதன் தொடக்க விழாவில் செங்கோட்டையன் கலந்து கொல்லாதது தான் தற்போது அதிமுக-வில் பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ரீதியாக அவரிடம் கேட்கையில், வரும் ஐந்தாம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து மனம் திறந்து பேசுகிறேன் எனக் கூறி முடித்துவிட்டார். அடுத்த கணமே அனைவரின் மத்தியிலும் இவர் கட்சியை விட்டு வெளியேறப் போகிறாரா என்று கேள்விதான் எழுந்தது??
மாறாக எடப்பாடி-யிடம் இது குறித்து கேட்கையில் இன்று மாலை பேட்டியளிக்கும் போது இது ரீதியாக பேசுகிறேன் எனக்கூறி உள்ளார். இதனால் அரசியல் களமே சற்று பரபரப்பாக உள்ளது. முன்னதாகவே எடப்பாடி ஒருமுறை, யாரையும் எதிர்பார்த்து கட்சி இல்லை என செங்கோட்டையனை சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் கட்சியை விட்டு வெளியேறுகிறேன் எனக் கூறுவதற்கு முன்பாகவே இவர் வெளியேற்றி விடுவாரா அதற்கான அறிவிப்பு தான் மாலையில் கூறப் போகிறாரா என பல கோணங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.