DMK: தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி தங்கள் மீதுள்ள அதிருப்திகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி உள்ளனர். இதில் செந்தில் பாலாஜி வழக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அவதூறு பேச்சில் சிக்கிய அமைச்சர் பொன்முடி மற்றும் ஊழல் வழக்கிலிருக்கும் செந்தில் பாலாஜி இவர்கள் இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க உள்ளார்களாம். இவர்களின் பதவியை அமைச்சர்களான சக்கரபாணி, சாமிநாதன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் லட்சுமணன் உள்ளிட்டோருக்கு பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இதனையெல்லாம் திருத்திக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அடுத்தடுத்து தங்கள் கட்சி மீதுள்ள கரையை துடைக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி வழக்கில் பதவியா? ஜாமீனா? என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து சொல்ல வேண்டுமென்ற கட்டாயத்தில் நிறுத்தியுள்ளது. நேரம் பார்த்து நீதிமன்றமும் அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் தலைமைக்கு இதை விட்டு வேறு வழி தெரியவில்லை.
இதனால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் உண்டாகும் என ஸ்டாலின் கூறியுள்ளார். இது ரீதியான அறிவிப்பு செந்தில் பாலாஜி வழக்குக்கு முன்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.