பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

Photo of author

By Sakthi

தற்போது அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் செந்தில் பாலாஜி எதிர்வரும் தேர்தலில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் முன்னரே திமுகவிற்கு மாறிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆகவே அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றார். அவர் அவ்வாறு பிரச்சாரம் செய்த சமயத்தில் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசியிருக்கிறார்.

அது என்னவென்றால் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்து விடுவேன் என்கிற ரீதியில் அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார். அதோடு கர்நாடக முகத்தை நான் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று மிக கடுமையாகப் பேசி இருக்கின்றார் அண்ணாமலை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், அவருடைய இந்தப் பேச்சுக்கு திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது திமுகவினரை உன்னால் முடிந்தால் தொட்டுப்பார் தமிழகத்தில் பாஜக வேலை எதுவும் எடுபடாது. திமுகவினரை மிரட்டவும் இயலாது நாங்கள் எழுந்து நின்றால் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அண்ணாமலை பேச்சு குறித்து திமுகவினர் புகார் அளித்திருக்கிறார்கள். அதன் பெயரில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.