Breaking News, News, Politics, State

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!!

Photo of author

By Sakthi

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!!

ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் உடல் எடை சற்று குறைந்துள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் அவர்கள் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் காவல் செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி அவர்களை நீதிமன்ற அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி அவர்களின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி வரை செந்தில் பாலாஜி அவர்கள் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும்.

இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில் பாலாஜி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் அக்டோபர் 30ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து மீண்டும் செந்தில் பாலாஜி அவர்கள் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். புழல் சிறையிலும் மருத்துவர்கள் செந்தில் பாலாஜி உடல்நிலை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் அவர்கள் செந்தில் பாலாஜி அவர்களின் உடல் எடை சற்று குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் அவர்கள் “செந்தில் பாலாஜி அவர்கள் சிறையில் உள்ள நூலகத்தில் அதிக நேரம் செலவிடுகிறார். செந்தில் பாலாஜி அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றார். மேலும் செந்தில் பாலாஜி அவர்கள் உடல் எடை சற்று குறைந்துள்ளது. செந்தில் பாலாஜி அவர்களுக்கு தேவைப்படும் பொழுது தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கெள்ளப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! 

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!