திமுக வேட்பாளர் பட்டியல்! பலிகடாவான முன்னாள் அமைச்சர்!

0
198

நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியின் சார்பாக தேர்தல் வேட்பாளர் பட்டியல் வேட்பாளர்களின் பெயர் போன்றவற்றை அறிவித்து வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வேலைகளில் மிக ஜரூராக இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.
அந்த விதத்தில் எதிர்க்கட்சியான திமுகவில் கடந்த சட்டசபை தேர்தலின் பொழுது போட்டியிட்டு வெற்றி பெற்ற எல்லோருக்கும் மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.இன்று திமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனேக நபர்களின் பெயர்கள் இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அந்த வகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மகனும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது அவர் சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய கொளத்தூர் தொகுதியிலேயே மறுபடியும் போட்டியிட இருக்கிறார்.அதேபோல அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் சொந்த மாவட்டமாக இருக்கும் வேலூர் மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல தமிழகம் முழுவதிலும் அனேக இடங்களில் திமுக தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜியை கரூர் தொகுதியில் நிறுத்தியிருக்கிறார்கள் திமுகவை சார்ந்தவர்கள். கரூர் தொகுதியை பொறுத்தவரையில் தற்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் களம்காண இருக்கிறார்.அவருக்கு அந்த தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே நற்பெயர் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான்.

அப்படி இருக்கையில் அவ்வாறு பலம் பொருந்திய ஒரு வேட்பாளருடன் செந்தில் பாலாஜியை களமிறக்கியிருப்பது செந்தில் பாலாஜியை பலி கொடுக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இதையெல்லாம் அறிந்து கொள்ளாத செந்தில்பாலாஜி திமுக சார்பாக கரூர் தொகுதியில் களம் காண இருக்கிறார். ஆகவே அந்த தொகுதியில் இருக்கின்ற அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் மற்றும் அதிமுக தொண்டர்களும் விஜயபாஸ்கர் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவிக்கிறார்கள்