DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் நீதிமன்றம் ஜாமீனா பதவியா என்ற கெடுபிடியை விதித்திருந்தது. மேற்கொண்டு உரிய பதிலை 28 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமெனவும் கோரியது. இவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் நீதிமன்றம் இந்த நிபந்தனை விதித்தது. இந்த வழக்கு அமர்வுக்கு வருவதற்கு முன்பாகவே பதவியையும் விலகிக் கொண்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (ED) முக்கியமான சில வாதங்களை முன்வைத்துள்ளது. அதில், “திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கக் கூடாது என கூறியுள்ளது. ஏனெனில் அவரை பதவியில் அமர்த்துவது விசாரணை செயல்முறைகளை பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
அத்தோடு , அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, பலமுறை வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க கோரி உள்ளார் என்றும், தொடர்ந்து தனது வழக்குரைஞர்களை மாற்றி, விசாரணையை முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கு உரிய பதிலக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, விசாரணை செய்யப்படவேண்டிய சாட்சிகள் எத்தனை பேர், மற்றும் வழக்கின் தற்போதைய நிலை என்பது குறித்து விவரித்து கூறுமாறு கேட்டுள்ளது. அதேபோல செந்தில் பாலாஜி தரப்பும் , எப்படி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றால் அமைச்சராக கூடாது என அமலாக்கத்துறை சொல்லலாம் என்று கேட்டுள்ளது.
இதற்கு உயர்நீதிமன்றம், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அமைச்சராக முடியாது. மேற்கொண்டு வேறேதும் இதற்கென புதிய நிபந்தனைகள் தேவையில்லை எனக் கூறியுள்ளனர்.