பரி போகிறதா செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி! ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

திமுக ஆட்சி அமைக்க பட்டவுடன் 6 மாத காலம் முடிவடைந்ததும் அவர்களுடைய செயல்பாடுகளை கண்காணித்து அவர்களுடைய இலாகாக்களை மாற்றலாம் அல்லது புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கலாம் என்று திமுக தலைமை திட்டமிட்டு இருந்தது. தொடக்க காலம் முதல் அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணித்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி வந்தது திமுக தலைமை.

இந்த சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது, அந்த விதத்தில் அமைச்சரவையின் புதிய பட்டியலை மாற்ற உள்ளதாக திமுக முக்கிய நிர்வாகிகள் இடையே பேச்சுக்கள் எழுந்திருக்கிறது. அந்தப் பட்டியலில் திமுகவின் மூத்த அமைச்சரான பெரியசாமி தான் எதிர்பார்த்த துறை தனக்கு கிடைக்கவில்லை என்று மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் என்று சொல்லப்படுகிறது, ஸ்டாலின் இடமும் நேரடியாக எடுத்து கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், செந்தில் பாலாஜியிடம் இருக்கின்ற மின் துறையை கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஐ பெரியசாமி இடம் ஒப்படைக்க நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்று சொல்லப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்டவற்றுக்கு மட்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மூத்த அமைச்சரான துரைமுருகன் அவர்களும் தனக்கு வேண்டிய துறைகள் எனக்கு கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதேபோல ஏவ வேலு விடம் இருக்கும் பொதுப்பணித் துறையை கூடுதல் பொறுப்பாக துரைமுருகனிடம் ஒப்படைக்க ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையை மட்டும் ஏவ வேலு கவனிப்பார் என்று சொல்லப்படுகிறது. பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இடம் இருந்து நிதித்துறையை எப்படியேனும் பிடுங்கிவிட வேண்டும் என பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் ஸ்டாலினிடம் அதிக நெருக்கத்தில் இருப்பதால் அவருடைய பதவியை பிடுங்குவது அவ்வளவு சாதாரணம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

அதே போலவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் முதல்வரிடம் நற்பெயர் வாங்கியிருக்கிறார். ஆகவே திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் சட்டசபை உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவி ஏற்கலாம் என்று சொல்லப்படுகிறது. சபாநாயகராக இருக்கக்கூடிய அப்பாவு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய சபாநாயகராக பிச்சாண்டி அவர்களும் துணை சபாநாயகராக சின்னசேலத்தை சார்ந்த உதயசூரியன் உள்ளிட்டோரும் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். இருந்தாலும் அப்பாவு அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. ஏற்கனவே நாடார் சமூகத்தைச் சார்ந்த மனோ தங்கராஜ், கீதாஜீவன் உள்ளிட்டோர் அமைச்சராக உள்ளதால் அப்பாவு அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செயல்பாடுகள் குறைவாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை உளவுத்துறை மூலமாக ஸ்டாலின் தெரிந்து கொண்டதாக தெரிகிறது. மனோ தங்கராஜ் அவர்களிடம் இருக்கும் துறையை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.