செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு தேர்தல் நடைபெறப்போவது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டதை அடுத்த அனைத்து கட்சியினரும் எவ்வாறு வாக்குகளை சேகரிக்க வேண்டும் எவ்வாறு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து களத்தில் இறங்கியது. முதலாவதாகவே ஆளும் கட்சியானது தனது முடிவில் தீர்க்கமாக இருந்ததால் இதுதான் வெற்றி பெறப் போகும் என பலரும் கூறி வந்த நிலையில் எதிர்க்கட்சி ஒருவித முடிவு இல்லாமல் ஓபிஎஸ் இபிஎஸ் என்று இருவரும் போட்டி போட்டே வந்தனர்.
இறுதியில் உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து ஓபிஎஸ் அவர்கள் தனது வேட்பாளரை நிறுத்தினார்.அத்தோடு தமிழ் மாநில காங்கிரஸுடன் கைகோர்த்து உள்ளதாலும் மேலும் டிடிவி தினகரன் இந்த தேர்தலில் வேட்பாளரை நிற்க வைக்காமல் வழிவிட்டதாலும் அதிக அளவு சாத்தியக்கூறுகள் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.
தற்பொழுது திமுக தனது சொந்த நிர்வாகியை நிற்க வைக்காமல் கூட்டணி நிர்வாகிக்கு ஆதரவாளிப்பது சற்று பின்னடைவை சந்திக்க வைத்துள்ளது என்றாலும் கமல்ஹாசன் அவர்களும் காங்கிரஸ் உடன் கைகோர்த்து அவர்களுக்கு மற்றொரு பலத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக வா திமுக வா என்பதை யூகிக்க முடியாமல் பெருத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சி வந்து சேர்ந்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தான் கற்றுக் கொண்ட அனைத்து வித்தைகளையும் இந்த தேர்தலில் காட்டி வருவதாக கூறுகின்றனர்.
அந்த வகையில் இவர் மக்களிடம் விழுந்து விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, பின்பு நிர்வாகிகளை நியமிப்பது என தொடங்கி மட்டன் பிரியாணி வரை அங்குள்ள மக்கள் முதல் நிர்வாகிகள் என அனைவரையும் கவர்ந்து வருவதாக கூறுகின்றனர்.
அதேபோல கட்சிக்கு கூடுதலாக உழைக்கும் நிர்வாகிகளுக்கு பேட்டா என தொடங்கி அனைத்தையும் ஸ்கெட்ச் போட்டு கச்சிதமாக செய்து வருவதாகவும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றது.
இரண்டு அமைச்சர்கள் தவிர திமுகவின் அனைத்து அமைச்சர்களும் ஈரோடு இடைத்தேர்தலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் செந்தில் பாலாஜி மட்டும் ஸ்டாலினிடம் குட் புக்கில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தற்பொழுது இருந்து சீட் போட்டு வைப்பதாக கூறுகின்றனர். இவர் தற்பொழுது காட்டி வரும் ஸ்கெட்ச் பிளான் அனைத்தும் அவர் முந்தைய கட்சியிலிருந்து கற்றுக் கொண்டது தான் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் வெற்றி கண்டால் மட்டுமே வரப்போகும் தேர்தலில் மக்களின் முன்னிலையில் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட முடியும், இல்லையென்றால் சற்று பின்வாங்கும் நிலை உண்டாகும் என்பதால் மும்மரமாக அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.