DMK: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி நியமனமானது செந்தில் பாலாஜி விடுவிப்புக்கு பிறகு நடக்குமென கோட்டை வட்டாரங்கள் கூறி வருகின்றது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. தமிழக முதல்வர் அமெரிக்கா சென்று அங்குள்ள தொழில் நிறுவன அதிபர்களுடன் முதலீட்டை ஈட்டும் பணியில் ஆலோசனை செய்ய உள்ளார். அவ்வாறு முதல்வர் செல்வதற்கு முன் அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும், கட்டாயம் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என பல தகவல்கள் வெளியானது.
மேற்கொண்டு திமுக அமைச்சரும் வரும் 22 ஆம் தேதிக்கு பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஆவார் என்பதை ஒரு மேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால் முதல்வரோ கோரிக்கை வலுத்துள்ளதே தவிர்த்து பழுக்கவில்லை என்று குதர்க்கமாக பதிலளித்தார். இதன் ஒட்டுமொத்த முடிவும் இறுதியில் செந்தில் பாலாஜியின் வழக்கில் வந்தடைந்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து முடிக்கும் படி நீதிமன்றம் அழுத்தம் தெரிவித்து வரும் நிலையில், கட்டாயம் இம்முறை வெளியேறி விடுவார் என்றும் திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கும் சமயத்தில் கட்டாயம் உதயநிதிக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். தற்பொழுது முதல்வர் தனது பணிகளை அமெரிக்காவிலிருந்து தானே கவனிக்க உள்ளதாக கூறியுள்ளார்.