காமெடி என்று சொல்லும்பொழுது கவுண்டமணி செந்தில் இவர்களின் காம்போ தமிழ் சினிமா துறையில் ஓடாத சில படங்களை கூட ஓட வைத்தது. ரசிகர்களின் மனதில் இவர்கள் இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்ற மனநிலையை தோன்றிய வண்ணம் எந்த படத்தில் பார்த்தாலும் இவர்கள் இணைந்தே காமெடி சீன்களில் நடித்து வந்தனர்.
இவர்களுடைய காம்போவில் கரகாட்டக்காரன், ஜென்டில்மேன் மற்றும் சின்ன கவுண்டர் என பல திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் செந்தில் அவர்கள் திடீரென ஒரு நாள் கவுண்டமணி இடம் சென்று, “நான் இல்லாமல் உங்களால் தனியாக காமெடியில் சாதிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட கவுண்டமணி அவர்களோ இதனை சவாலாக எடுத்துக் கொண்டு தனக்கென ஒரு வழி கொண்டு அதில் பயணிக்கலானார். அதேபோன்று செந்தில் அவர்களும் தனியாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
இவர்கள் இருவரில் கவுண்டமணி அவர்கள் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற நிலையில் செந்தில் அவர்களுக்கு அவ்வாறு நிலைமை ஏற்படவில்லை.
தான் செய்தது தவறு என செந்தில் அவர்கள் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்தால் படங்கள் இன்னும் நன்றாக அமையும் என எதிர்பார்த்ததோடு திரையரங்குகளின் உரிமையாளர்களும் இதனை வேண்டியதால் மீண்டும் செந்தில் மற்றும் கவுண்டமணி அவர்கள் இணைந்து நடிக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.