இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை!

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்ட நிலை காவலர், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு  தேர்வு அறிவித்தது. அதற்கான தேர்வும் நடைபெற்றது அதில் தகுதியுள்ளவர்கள்   பங்கேற்றனர்.

மேலும்  இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்   விருப்பம்  உள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.அதற்கான  விண்ணப்பப்படிவங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு  அனைவரும்  ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

தேர்விற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கு ஏதேனும்  சந்தேகம் மற்றும் தகவல்கள் வேண்டுமானால் அதனை  உடனடியாக தெளிவுபடுத்தி  கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்படி மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

எவ்வாறு  இந்த பணிக்கு  விண்ணப்பிக்க வேண்டும் என்ற சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக நேரடியாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும்  அதற்கான தொலைபேசி எண் 944597899 என்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.இதற்கான கால அவகாசம்  ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மட்டுமே என்றும் கூறியுள்ளார் . மேலும்  காலை  9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த  உதவி மையம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment