விக்ரமை இழுத்தடித்த சேது திரைப்படம்!! விவேக் காட்டிய வழி!!

Photo of author

By Gayathri

விக்ரமை இழுத்தடித்த சேது திரைப்படம்!! விவேக் காட்டிய வழி!!

Gayathri

Sethu movie that pulled Vikram!! The way shown by Vivek!!

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படக்கூடிய விவேக் அவர்களின் வீடியோ ஒன்று தற்பொழுது வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன் நடிகர் விவேக் மற்றும் விக்ரம் இருவரும் சந்தித்த பொழுது பேசிக் கொண்ட நிகழ்வினை நடிகர் விவேக் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விக்ரம் குறித்து விவேக அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

பாளையத்தம்மன் திரைப்படத்தில் நடிகர் விவேக் அவர்கள் நடித்துக் கொண்டிருந்த பொழுது தூரத்திலிருந்து யாரோ ஒருவர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் விவேக் அவர்கள் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கும் பொழுது அதே இடத்தில் நின்று அந்த நபர் பட சூட்டிங் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

சரி அவர் யாரென அருகில் சென்று பார்ப்போம் என அருகில் சென்று பார்த்த பொழுது அது நடிகர் விக்ரம் என விவேக் தெரிவித்திருக்கிறார். பாளையத்தம்மன் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுதுதான் நடிகர் விக்ரமின் உடைய சேது திரைப்படமானது எடுக்கப்பட்டிருந்திருக்கிறது.

நடிகர் விவேக் அவர்கள் நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டதற்கு விக்ரம் அவர்கள் சேது திரைப்படத்தின் ஷூட்டிங் இங்கு தான் எடுப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. இந்த திரைப்படம் ஆனது நிறுத்தி நிறுத்தி எடுக்கப்படுகிறது என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் நடிகர் விக்ரம். ஆனால் விவேக் அவர்களோ நான் தற்பொழுது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இடம் கேட்டு உன்னை நடிக்க வைக்கவா? என விவேக் அவர்கள் கேட்டதற்கு விக்ரம் அவர்கள் மறுத்துவிட்டதாக விவேக் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

ஏனெனில் விக்ரம் அவர்களுக்கு சேது திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்திருக்கிறது. விக்ரம் அவர்கள் நடிகர் விவேக்கிடம் கூறும் பொழுது இந்த திரைப்படம் வெளிவந்தால் மக்கள் என்னை ஒரு ஹீரோவாக கொண்டாடுவார்கள் இந்த திரைப்படம் முடியும் வரை நான் வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆக விரும்பவில்லை என விக்ரம் அவர்கள் தெரிவித்ததாகவும் அந்த திரைப்படம் வெளிவந்த உடன் விக்ரம் கூறியது போலவே மக்கள் அனைவரும் சீயான் விக்ரமை கொண்டாடியதாகவும் நடிகர் விவேக் அவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.