இராசிபுரத்தில் ஆற்று வெள்ளம் போல் உருண்டோடும் சாக்கடை கழிவு நீர் ! குடி நீரிலும் கலப்பதால் மக்கள் அவதி!

0
136

இராசிபுரத்தில் ஆற்று வெள்ளம் போல் உருண்டோடும் சாக்கடை கழிவு நீர் ! குடி நீரிலும் கலப்பதால் மக்கள் அவதி!

இராசிபுரம் நகராட்சி பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு புதை குழி சாக்கடையில் இருந்து வரும் கழிவு நீர் மக்கள் வசிக்கும் இடம் மற்றும் சாலையில் வெளியேறுகின்றன.

இதனால் அங்கு வாழும் மக்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் விசிகொண்டிருக்கிறது . பொது இடங்களில் சாக்கடை கழிவு நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடுகிறது. குடிக்கும் தண்ணீர்உடன் கழிவு நீர் கலந்து வருகிறது.

இதனால் பல நோய்கள் வரும் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். சாக்கடை கழிவு நீர் தேங்கிய இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உருவாகின்றது.

தட்டாங்குட்டை பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் அவற்றை விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை சீர்படுத்த இராசிபுரம் நகராட்சி பகுதியில் புதைகுழி சாக்கடை திட்டத்தின் படி அறிக்கை நிறைவேற்றப்பட்டது. வீடுகள் தோறும் இதற்கான இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.

Previous articleபயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்!
Next articleகுரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!