வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் !

Photo of author

By Hasini

வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் !

நம் நாட்டில் மட்டும் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றது என்று பார்த்தால் உலகம் முழுவதுமே அதே நிலை தான்.  உலகமே இந்த நிலைமையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது போல. பெண்களுக்கு எங்குமே நிம்மதி கிடையாது. ஒரு பாதுகாப்பு தன்மை கிடையாது.

இந்த நிலை எப்போது மாறும். கேரள மாநிலத்தில் சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்களையும் விட்டு வைக்கவில்லை. கேரளாவில், திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலா கடற்கரைக்கு பிரிட்டனைச் சேர்ந்த இமா மற்றும் 23 வயதான ஏமி ஆகிய இரு பெண்கள் சுற்றுலா வந்தனர். இவர்கள் இருவரும் கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது மதுபோதையில் இருந்த சிலர் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர்.

இது தொடர்பாக அந்த இரண்டு சுற்று பயணிகளும் வர்கலா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தற்போது ஒரு நபரை கைது செய்துள்ளார்கள்.  மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் பலருக்கும் எழுந்துள்ளது.

ஏனெனில் இதே போன்று ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் நடந்தது. அதில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் கடந்த 2018-ஆம் ஆண்டில் கோவளம் கடற்கரையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறி உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.