Cinema

வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை வழக்கில்.. பிரபல நடிகைகளுக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

பிரபல நடிகைகளுக்கும் தேசிய மகளிர் ஆணையம் மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட வழக்கில், சம்மன் அனுப்பியுள்ளது.

சன்னி வர்மா என்பவர் ஐஎம்ஜி வென்சர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், மிஸ்டர், மிஸ் இந்தியா போட்டிகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது.

பல இளம்பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு வாங்கி தருவாகக் கூறி பல பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் இந்நிறுவனத்தின் சன்னி வர்மா மீது புகார் கூறியிருந்தார்.

இந்தப் புகார் பற்றி தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது. ஐஎம்ஜி வென்சர் நிறுவனத்துக்கு வீடியோ மூலம் புரமோஷன் செய்துள்ள நடிகைகள் ஊர்வசி ரவ்தெலா, இஷா குப்தா, நாகினி நடிகை மவுனி ராய், பிரின்ஸ் நருல்லா, இயக்குனர் மகேஷ் பட் உட்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அவர்கள் மகளிர் ஆணையம் சொன்ன நேரத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் வரும் ஆகஸ்ட்18 ஆம் தேதி ஆஜராகவேண்டும் என்று மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் நடிகர் சோனு சூட்டும் இதன் விளம்பரத்தில் பங்கேற்றுள்ளார் என்றும் அவருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் ஒத்துழைப்பாகக் கூறியிருப்பதாகவும் ரேகா சர்மா கூறியுள்ளார்.

 

Leave a Comment