மலையாள ஹீரோவான நடிகர் நெவின் பாலின் மீது பெண் ஒருவர் பாலியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இப்பொழுது அந்த வழக்கிற்கும் இவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஃப் ஐ ஆர் – லிருந்து காவல்துறை இவருடைய பெயரை நீக்கி உள்ளது.
தென்னிந்திய நடிகராக அனைவரையும் ரசிக்க வைத்தவர் நிவின் பாலி. இவருடைய நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் மலையாள படங்களில் மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்ட இவர் மீது, கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ள நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஆண்டு பட வாய்ப்பு தருவதாகக் கூறி துபாய் ஹோட்டலில் நிவின் பாலி, தயாரிப்பாளர் ஏ.கே.சுனில் உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இந்த சிறப்பு புலனாய்வு குழு புகாரினை எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இக்காவல் நிலையத்தில் உள்ளவர்கள் நிவின் பாலி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த செய்தி நிவின் பாலி என்னுடைய ரசிகர்களிடையேயும் மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் நிவன் பாலி அவர்கள் தன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்றும், அதை நிரூபிக்க நான் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.
தான் சொன்னதைப் போன்று சம்பவம் நடந்த அன்று அந்த இடத்தில் தான் இல்லை என்பதற்கான முக்கிய ஆதாரங்களை காவல் நிலையத்தில் நிவின் பாலி அவர்கள் ஒப்படைத்திருக்கிறார். இந்த ஆதாரங்களை விசாரித்த காவல் அதிகாரிகளும் இதில் இவருக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று முதல் குற்ற பத்திரிக்கையிலிருந்து இவருடைய பெயரை நீக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.