3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Photo of author

By Kowsalya

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான் இந்த அக்னி வீரன் இவருக்கு 52 வயதாகிறது. இவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமியை பிடித்துக் கொண்டு சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
3 வயது சிறுமியை காணாத தன் தாய் தேடிய பொழுது, அக்னி வீரன் தன் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்து வந்ததை கண்கூடாக பார்த்து உள்ளார். இதனால் அக்னி வீரனை சரமாரியாக கேள்விகளை கேட்டுவிட்டு திட்டிவிட்டு குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்.

 

இந்த செயல் வெளியில் தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்பதாகக் கருதி அவர் வெளியில் யாருக்கும் சொல்லாமலும் போலீசுக்கும் தகவல் அளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று சிறுமியின் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்ததை அடுத்து சிதம்பர டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி ஆகியோரும் அக்னி வீரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

குழந்தைகளின் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்ந்து நடந்து வருகிறது. சிறுமியின் தாயார் தனது குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது போல மற்ற குழந்தைகளுக்கும் இந்த சம்பவம் அக்னி வீரன் ஆனால் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளார்.