அய்யா! விட்றுய்யா! கதறி துடித்த மூதாட்டி!! விடாத மூர்த்தி!

Photo of author

By Kowsalya

ஆந்திராவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தில் அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 60 வயது மூதாட்டி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதே பகுதியில் மூர்த்தி என்றவரும் வாழ்ந்து வந்துள்ளார்.

 

மூதாட்டி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு, மூதாட்டியை கடுமையாகத் தாக்கி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி தப்பிச் சென்றுள்ளார்.

 

இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த மூதாட்டி கதறிக் கொண்டு இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் கிராம மக்கள் அனைவருக்கும் தெரிவித்தனர். கிராம மக்கள் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள புங்கனூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

மூர்த்தியின் இந்த செயலை கண்டு ஆவேசமடைந்த கிராம மக்கள், மூர்த்தி தனது வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்து மூர்த்தியை பிடித்து தாக்கி அடித்து கொன்றனர்.

 

இதனால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கிராம மக்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.