அரசு பெண் அதிகாரிகளை மிரட்டி பாஜக தலைவர் நடத்திய பாலியல் லீலைகள்!! வெளிவந்த அதிர்ச்சி தரும் வீடியோக்கள்!!
பெண்களை ஏமாற்றி மிரட்டி பாலியல் லீலைகள் புரிந்த பாரதிய ஜனதா மாநிலத் துணை தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பாரதிய ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா. தற்போது சோமையா குறித்த ஆபாச வீடீயோக்கள் தான் அங்கு ஹாட் டாபிக் . இவரது ஆபாச வீடியோக்கள் மராத்திய செய்தி சேனலில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் மொத்தம் 35 வீடியோக்கள் உள்ளன.மொத்தம் 8 மணி நேரம் ஓடக் கூடியது. திகைக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த இந்த ஆபாச வீடியோ விவகாரம் தற்போது ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் எதிர்கட்சிகள் சோமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என போராட்டத்தில் குதித்து உள்ளன. இது குறித்து சோமையா கூறுகையில் தான் எந்த பெண்ணையும் துன்புறுத்தவில்லை. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் கிரித் சோமைய்யா மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர் அரசு அதிகாரிகள் என்பது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பெண் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு நிறுவனங்களை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி தன்னுடைய பாலியல் ஆசைக்கு அடிபணிய வைத்ததாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. சோமையா பல எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் இதுபோல் மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார்.