கணவரை வெறுப்பேற்ற கவர்ச்சி போட்டோ ஷூட்! விவாகரத்து பெற்ற உடன் ஆட்டத்தை தொடங்கிய கதாநாயகி!

Photo of author

By CineDesk

கணவரை வெறுப்பேற்ற கவர்ச்சி போட்டோ ஷூட்! விவாகரத்து பெற்ற உடன் ஆட்டத்தை தொடங்கிய கதாநாயகி!

தற்பொழுது தமிழக மக்களால் வி. ஜே என்று அழைக்கப்பட்டு பிரபலமாகி உலா வருபவர் தான் மகேஸ்வரி. இவர் தனது படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்பு திரைத் துறையில் அதிக அளவு ஆர்வம் கொண்டிருந்தார். இவர் முதன் முதலில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி உள்ளிட்ட தமிழ் இசை சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவரது பேச்சு திறமையால் தமிழக மக்கள் மனதில் விரைவிலேயே இடம் பிடித்தார். பின்பு இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

பல சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மகேஸ்வரிக்கு ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகேஸ்வரி விவாகரத்து பெற்றுக் கொண்டார். தற்போது சென்னையில் தனது மகன் மற்றும் மகேஸ்வரி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். தற்பொழுது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ஒரு பேட்டியில் இவர் இரண்டாவது திருமணம் என்றாலே பயமாக தான் உள்ளது எனக் கூறினார்.

இதன் மூலம் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் நாட்டம் இல்லை என்பது தெரியவந்தது. பல பட வாய்ப்புகளுக்காக தற்போது இறங்கி உள்ளார். சமுத்ரகணி உடன் ரைடர் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து இவரது பல படங்கள் வெளிவர உள்ளது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் விஜே மகேஸ்வரி நடித்துவருகிறார். இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்று மகேஸ்வரிக்கு பாருக்கு செல்வது போல டாஸ்க் கொடுத்தது.டாஸ்க்கை ஒப்புக்கொண்டு இவர் சென்ற புகைப்படம் சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் வைரலை கிளப்பியது.