டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ச்சியாக முதலிட வகித்து வருகிறார்.
மகளிர் டி20 தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக களமிறங்கிய இளைய வீராங்கனையான 17 வயதேயான ஷஃபாலி கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதிலிருந்து தொடர்ந்து இன்று வரை தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷஃபாலி 3 அரை சதங்களுடன் 665 ரன்கள் குவித்துள்ளார். . அதேபோல் இந்தியாவின் மந்தனா 3-ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.