உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

Photo of author

By Parthipan K

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

Parthipan K

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

டிவிட்டரில் ரசிகர்களுடன் கலனதுரையாடிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் போட்டியில் இருக்கும் ’கான்’ நடிகர்களில் பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாருக் கானுக்கு சில வருடங்கள் இறங்குமுகமாக அமைந்துள்ளது. வரிசையாக அவர் நடித்த ரய்ஸ், பேன், ஜீரோ ஆகியப் படங்கள் தோல்வியடைந்து அவரை துவள வைத்துள்ளன. இதனால் இரு ஆண்டுகளாக அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் இப்போது அவர் படம் நடிக்க தயாராகி விட்டதாகவும் அதற்காக தமிழ் இயக்குனர் அட்லியிடம் கதைகேட்டு கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் தனது ரசிகர்களிடம் உரையாடும் பொருட்டு டிவிட்டரில் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக அறிவித்தார். இதையடுத்துப் பலரும் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். இதில் திரை உலகத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.

அதில் 20 கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்தார். அந்த 20 கேள்விகளில் ஒரு கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷாருக்கிடம் ‘நான் உங்கள் வீட்டின் அறை ஒன்றை வாடகை எடுக்க எவ்வளவு செலவாகும் ?’ எனக் கேட்டிருந்தார் ஒரு ரசிகர். இந்த வித்தியாசமானக் கேள்விக்கு தன் பாணியில் மிகவும் வித்தியாசமாக பதிலளித்துள்ளார் ஷாருக்.

ஷாருக் தனது பதிலில் ‘அதற்காக நீங்கள் 30 வருடம் கடுமையாக உழைக்கவேண்டும்.’ எனத் தனது திரையுலக உழைப்பைக் குறித்து சொல்லியுள்ளார். ஷாருக் கான் திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.