ஷாருக்கானின் டிவிட்டர் பதிவு!! கனவில் வாழ்வதாக அட்லீ நெகிழ்ச்சி!!
நடிகர் ஷாருக்கான் தனது டிவிட்டர் பதிவில் அட்லீ மற்றும் அவரது மனைவி குழந்தை குறித்து பதிவிட்டதற்கு அட்லீ நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தினை இயக்கிவருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர்.
ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தினை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று முன்தினம் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது.
இது ரசிகர்களிடம் நன்கு வரவேற்பை பெற்ற நிலையில் அதுப் பற்றி ஷாருக்கான் தந்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் அட்லீ மற்றும் அவரது மனைவி, குழந்தை குறித்தும் பதிவிட்டார்.
இதற்கு பதில் கூறிய அட்லீ” “மன்னர்களின் கதைகளைப் படிப்பதில் இருந்து நிஜமான ஒருவருடன் பயணத்தைத் தொடங்குவது வரை, நான் கனவில் வாழ்கிறேன் என்று நினைக்கிறேன்.
இந்த படம் என்னுடைய வரம்புக்கு மீறியது. நான் இதில் விலைமதிப்பற்ற பாடங்களை கற்றுக் கொண்டேன். கடந்த 3 வருடங்களில் நான் உன்னிப்பாகக் கண்ட சினிமா மீதான உங்கள் ஆர்வமும், நீங்கள் உழைத்த கடின உழைப்பும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
From reading tales of kings to embarking on a journey with one in real, #Chief I guess I’m living the dream I’ve always dreamt of. Thank you so much ❤️ This film pushed me to my limits, where I gained invaluable lessons along the way. Your passion towards cinema and the amount of… https://t.co/VY83amW8Vp
— atlee (@Atlee_dir) July 12, 2023