பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து

0
152

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து

ஆசியக்கோப்பை தொடரை வெகு சுவாரஸ்யமான ஒரு தொடராக மாற்றி இருப்பதே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிதான்.

கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த வெற்றியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முக்கிய பங்கு வகித்தார், ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை முதல் மூன்று ஓவர்களில் வெளியேற்றினார், பின்னர் கேப்டன் விராட் கோலியை வெளியேற்றினார்.

இந்நிலையில் இப்போது அசுரபார்மில் இருக்கும் அவர் காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் “ஷாஹீனின் காயம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆசியக்கோப்பையில் அவர் இருக்க மாட்டார் என்பது வருத்தமாக இருக்கிறது.” என்று அவர் டிவீட் செய்திருந்தார்.

வக்கார் யூனிஸின் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் “இந்த ஆசிய கோப்பையில் பும்ரா மற்றும் ஹர்ஷல் விளையாடாதது மற்ற அணிகளுக்கு ஒரு நிம்மதி!” என டிவீட் செய்துள்ளார்.

Previous articleஇன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!
Next articleஅகில இந்தியாவைக் கலக்கிய புஷ்பா… இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று