ஷாலினி – சங்கீதாவின் உன்னதமான நட்பு!! நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவிற்காக ஷாலினி செய்த உதவி!!

Photo of author

By Gayathri

நடிகை ஷாலினி மற்றும் விஜய் அவர்களின் மனைவி ஆன சங்கீதா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்றும், விஜயின் மனைவி சங்கீதா அவர்கள் தற்பொழுது விஜயினுடைய வீட்டில் இல்லை என்றும் பலவிதமான வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் இறைவனடி சேர்ந்த முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோபாலபுரம் வந்திருந்தார் விஜயின் மனைவி சங்கீதா அவர்கள்.

இதனால் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரியவில்லை என்றும். இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக தான் வாழ்கின்றனர் என்றும் விஜயினுடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் கடந்த இரண்டு வருடங்களாகவே விஜய் எந்த ஒரு நிகழ்வுக்கும் சங்கீதாவை அழைத்துச் செல்லவில்லை இதற்கான பின்னணி என்ன என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு கூட தன்னுடைய மனைவியான சங்கீதாவை தளபதி விஜய் அவர்கள் அழைத்து வராததற்கு இவர்கள் இருவரும் பிரிந்ததே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சினிமா துறையில் ஆர்வம் காட்டி வந்ததற்கு விஜய் எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் தன்னுடைய மகனுக்கு சங்கீதா அவர்களே முழுமையாக உதவி செய்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகனுடைய ஆசையை புரிந்து கொண்ட சங்கீதா அதற்காக ஷாலினி அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

நடிகை ஷாலினியும் விஜய் மற்றும் சங்கீதாவின் மகனான ஜேசன் சஞ்சய்க்கு படம் இயக்குவதற்கு உதவி செய்து இருக்கிறார்.

மேலும், நடிகர் அஜித்தின் உடைய மேனேஜரான சுரேஷ் சந்திராவை ஜேசன் சஞ்சயின் செய்தி தொடர்பாளராக பணிபுரிய வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஷாலினி பரிந்துரையின் பெயரில் லைக்கா நிறுவனம் ஜேசன் சஞ்சய் உடைய படத்தினை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சந்திப் கிஷனை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.