பெற்ற மகனே தாயை சுட்டுக் கொன்ற அவலம்! நொடி பொழுதில் நடந்த விபரீதம்!

Photo of author

By Rupa

பெற்ற மகனே தாயை சுட்டுக் கொன்ற அவலம்! நொடி பொழுதில் நடந்த விபரீதம்!

Rupa

Updated on:

Shame on the mother who shot her adopted son! The tragedy that happened in a matter of seconds!

பெற்ற மகனே தாயை சுட்டுக் கொன்ற அவலம்! நொடி பொழுதில் நடந்த விபரீதம்!

குழந்தைகள் பலவற்றை பெரியவர்களைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். சிறு வயது குழந்தைகளுக்கு முன் நல்லதை பேசுவதும் அதை கற்று தருவது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பாகும். ஏனென்றால் குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்து தான் பலவற்றை கற்றுக் கொள்கின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது ஓர் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த இல்லினாய்ஸ் பகுதியில் வசித்து வருபவர் தான் டீஜா மற்றும் அவரது கணவர். இருவருக்கும் 3 வயதில் ஒரு மகன் உள்ளார். டீஜா என்பவர் தனது மகனுடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.

ஷாப்பிங் சென்று விட்டு டீஜா மற்றும் அவரது மகன் காரில் வீட்டுக்கு கிளம்பி உள்ளனர். அப்பொழுது டீஜா அவரது மகனை பின்பு உள்ள இருக்கையில் உட்கார வைத்து உள்ளார். அவரது மகன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. அது விளையாட்டுத் துப்பாக்கி என்று எண்ணி அவரது மகன் அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். திடீர் என்று எதிர்பார்க்க நேரத்தில் அவரது மகன் துப்பாக்கியை அழுதியுள்ளார். அப்போது அந்தத் துப்பாக்கியில் இருந்த குண்டு நேரடியாக டீஜா முதுகில் தாக்கியது. சம்பவ இடத்திலேயே டீஜா உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர் இவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்பு போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் டீஜாவின் கணவர் ஆவணங்கள் இன்றி துப்பாக்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதனால் டீஜாவின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் மனதளவில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அதிலிருந்து மீட்க மருத்துவர்கள் வைத்து மனநல ஆலோசனை கொடுத்து வருகின்றனர். பெற்ற மகனே தாயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.