ஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா?

0
294

ஷங்கர் கையில் எடுக்கும் வேள்பாரி… 3 பாகங்களுக்கு 2000 கோடி பட்ஜெட்… ஹீரோ இவரா?

பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை அடுத்து வரலாற்று புனைகதைகளுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது.

இந்தியாவில் வரலாற்று கதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் தயாரான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.

பாகுபலி அளவுக்கு தமிழில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பிரமாண்டமாக வெளியாகி தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தன் பங்குக்கு தற்போது எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக உருவாக்க உள்ளார். மூன்று பாகங்களாக இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

முதலில் இந்த படத்தில் சூர்யா அல்லது யாஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது பாலிவுட் நடிகரான ரண்வீர் சிங் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களால் அவரை ஒரு தமிழ் மன்னனாக ஏற்றுக்கொள்ள முடியுமா என தெரியவில்லை.

இதற்கிடையில் முதலில் இரண்டு பாகங்களாக 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் இந்த படம் உருவாவதாக இருந்தது. ஆனால் இப்போது மூன்று பாகங்களும் சேர்த்து 2000 கோடிக்கு மேல் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleஐயோ அவர் இருக்காரா?… மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு… தளபதி 67 ல் நடக்க போகும் மாற்றம்!
Next articleஅனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here