பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்… 

0
70

 

பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்…

 

இயக்குநர் ஷங்கர் தற்பொழுது இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு 90 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்பொழுது இயக்குநர் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்.

 

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகநாக நடிக்கிறார். நடிகை கியரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூரியா, ஜெயராம், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ அவர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிக்கிறார். கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

 

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல் ஒன்றில் நடிகர் ராம் சரண் அவர்கள் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளார். இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

 

அதாவது கேம் சேஞ்சர் படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டும் 90 கோடி ரூபாய் செலவு ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் அவர்கள் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் பாடல் கட்சிகளையும் மிகவும் பிரம்மாண்டமாக இயக்குவார் என்பது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் கேம் சேஞ்சர் படத்தின் பாடல் காட்சிகளுக்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக புதிய காட்சிகளை இயக்குநர் சங்கர் உருவாக்கியுள்ளதால் 90 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக கூறப்படுகின்றது.