TVK DMK: திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து ஆளும் கட்சிக்கு பல சர்ச்சைகள் எழ ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் மாநாட்டின் முடிவில் கட்டாயம் கூட்டணி முறையில் ஆட்சி அமைவதோடு அவர்களுக்கு ஆட்சியில் பங்கும் கிடைக்கும் என தெரிவித்தார். இதற்கு மற்ற கட்சியினர் நல்ல வரவேற்ப்பை அளித்தனர்.
குறிப்பாக திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளே இதற்கு ஆதரவு அளித்தது. இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் வழக்கறிஞர் சரவணன், முதல்வர் ஸ்டாலினிடம் ஆட்சியில் பங்கு வேண்டுமென கடிதமும் எழுதியிருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக விசிக விலிருந்து கூட இதற்கு ஆதரவளித்து கருத்து கூறியிருந்தனர். இவையனைத்தும் திமுகவுடனான கூட்டணிக்கு ஆட்டம் கான ஆரம்பித்துள்ளது. அதேபோல திமுகவும் அதன் முக்கிய பதவிகளை திமுக நிர்வாக்கிகளை தவிர்த்து யாருக்கும் வழங்குவதில்லை.
குறிப்பாக வாரிய பதவிகள் மட்டுமே வழங்கி வந்தனர். அதிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறு இருக்கையில் தவெக தலைவர் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டதும் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுவிடும் என முதல்வருக்கு உளவுத்துறை ரிர்போர்ட் கொடுத்துள்ளது. இதனை சரிக்கட்டும் விதமாக தற்பொழுது தமிழக காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரமோகனுக்கு தற்பொழுது அட்வகேட்டாக உயர் பதவி வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து திமுகவின் இதர கூட்டணி கட்சிகள் பதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் யாருக்கு எந்த பதவி வழங்கலாம் என்பது குறித்து முதல்வர் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.