சமீபத்தில், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என்றும், இந்த ஊழல் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் அதானி குழுமத்தின் சார்பில் கூறப்பட்டிருந்தது. “அதானி கிரீன் எனர்ஜி” நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியிட்டிருந்த விளக்கத்திற்குப் பிறகு சரிவில் இருந்த அதானியின் பங்குகள் சட்டென உயர்ந்து, இன்று 15% வரை அதிகரித்துள்ளது.
கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையில் “எஃப்சிபிஏ” மீறல் தொடர்பாக எந்த ஒரு குற்றச்சாட்டும் வரவில்லை. இது “யூஎஸ் செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன்”-இன் சிவில் புகார் உட்பட இணைந்துள்ளது. இதனால் இந்த விளக்கம் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகின்றது.
அதானியின் டோட்டல் கேஸ் பங்கின் விலை இன்று காலை 15% வரை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எனர்ஜி சொல்லுஷன்ஸ் பங்குகளின் விலை தலா 10% உயர்ந்துள்ளது. அது மட்டுமில்லாமல், அதானி பவர் பங்குகளின் விலை 9% உயர்ந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த உயர்விற்கு அதானி குடும்பத்தைச் சேர்ந்த இரு பங்குகள்தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்றுதான் “அதானி டோட்டல் கேஸ் லிமிடெட்”. அது 15.13% ஆக உயர்ந்து ரூ. 79.05 ஆக உயர்த்துள்ளது.
(இந்தச் செய்தி தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது. முதலீடு சார்ந்த ஆலோசனைகளைத் தங்கள் பொருளாதார ஆலோசகரிடம் கேட்டு முடிவு செய்து கொள்வது நல்லது).