ஒரே வருஷத்தில் 28 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தானாம் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 3 படங்கள் அதிகபட்சமாக ஹீரோயின்கள் நடிப்பார்கள். ஆனால் ஒரு கோலிவுட் நடிகை வருடத்திற்கு 28 படங்கள் நடித்து அசர வைத்துள்ளாராம்.
பெரும்பாலான நடிகர், நடிகைகள் தாங்கள் நடிக்கும் முதல் படத்தை அடையாளமாக்கி பெயரை வைத்துக் கொள்வார்கள். அப்படித்தான், ஆந்திராவில் விஜயலட்சுமியாக பிறந்து கோலிவுட்டுக்கு சில்க் ஸ்மிதாவாக மாறினார்.
இவரை முதன் முறையாக தமிழில் வினு சக்கரவர்த்தி அறிமுகப்படுத்தினார். இவருக்கு ‘வண்டிசக்கரம்’ தான் முதல் படமாகும். ஆனால், இப்படம் ஸ்மிதாவிற்கு மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது. இப்படத்திற்கு முன்பே ஸ்மிதா 6 படங்கள் மலையாளத்தில் நடித்தாலும், தமிழ் சினிமா தான் அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.
கிட்டத்தட்ட இதுவரை சில்க் ஸ்மிதா 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். ஒரு ஆண்டுக்கு 28 படங்கள் படங்களில் நடிப்பாராம். ஒரு மாதத்தில் 2 அல்லது 3 படங்கள் வெளியாகுமாம். தமிழ் மட்டுமல்லாமல், இவர் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் மொத்தம் 26 படங்களில் நடித்துள்ளாராம். ஆனால், இவர் நடிப்பில் பெரும்பாலும் குத்துப்பாடல்கள் தான் இருக்குமாம். இதுமட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் தியாகராஜனின் மனைவியாக நடித்தார். இதன் பிறகு ‘கோழி கூவுது’ படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.