ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த ஷீத்தல் தேவி! சிறுமிக்கு காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் தங்கம் வெற்று சாதனை படைத்த சிறுமி ஷீத்தல் தேவி அவர்களுக்கு ஆனந்த் மஹிந்த்ரா அவர்கள் காரை பரிசளித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஷீத்தல் தேவி அவர்கள் இரண்டு தங்கப் பதக்கம் வென்று ஒரே பதிப்பில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
கைகள் வளர்ச்சி குன்றிய 16 வயது நிரம்பிய சிறுமி ஷீத்தல் தேவி அவர்கள் நிகழ்த்திய இந்த சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா அவர்கள் சிறுமி ஷீத்தல் தேவியை பாராட்டி அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இது குறித்து ஆனந்த் மஹிந்திரா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் ஷீத்தல் தேவி அவர்களின் வாழ்க்கை பயண வீடியோ ஒன்றை பதிவேறீறம் செய்தார். மேலும் ஆனந்த் மஹிந்த்ரா அவர்கள் அந்த பதிவில் “இனி மேல் என்னுடைய வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன பிரச்சனையை பற்றி நின் கூறை சொல்லப் போவது கிடையாது. முதலில் தேவி நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஆசிரியர்.
தயவு செய்து எங்கள் நிறுவனத்தில் உள்ள எந்த கார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். அதை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகின்றோம். மேலும் அதை உங்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தது போல மாற்றி அமைத்து தருகின்றோம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.