வங்க தேசத்தில் இருந்து தப்பித்து வந்த முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் தற்பொழுது இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வங்க தேசத்தில் 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதையடுத்து வங்க தேசம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிகழ்ந்து வருகின்றது. ஆங்காங்கே கலவரங்கள் வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் ஷேக் ஹசீனா அவர்கள் வங்கதேசத்தில் இருந்து தப்பித்து இந்திய விமானப்படையின் உதவியுடன் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார். இதையடுத்து இவர் எங்கு இருக்கின்றார் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது வங்க தேசத்தில் இருந்து தப்பித்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா அவர்கள் இந்திய விமானப்படையின் கண்காணிப்புக்கு கீழ் டெல்லியில் பாதுகாப்பாக இருக்கின்றார். பிற பாதுகாப்பு குழுக்களும் ஷேக் ஹசீனா அவர்களை கண்காணித்து வருகின்றது.
மேலும் இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா அவர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அங்குள்ள ஷேக் ஹசீனா அவர்களின் சகோதரி ரெஹானா அவர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றார். ஷேக் ஹசீனா அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்த பின்னர். ஷேக் ஹசீனா அவர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளார்.
வங்க தேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களை நிறுத்த வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனா கொண்டு வந்த 30 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதை 5 சதவீதமாக குறைத்துள்ளது. இருப்பினும் வங்க தேசத்தில் போராட்டம் நின்றபாடு இல்லை.