DMK : அமைச்சர் சேகர்பாபு வின் மனைவி கோவிலுக்கு வருகை தருவதையோட்டி கோவில் நிர்வாகமானது ஆகம விதிகளை மீறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகம விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது யாருக்காகவும் மாற்றப்பட மாட்டாது. அந்த வகையில் சேகர்பாபுவின் மனைவிக்காக ஆகம விதியையே மாற்றியுள்ளனர்.
தென்காசியில் உள்ள சங்கரநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப் படும். இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சேகர்பாபு மனைவி சாந்தி வந்துள்ளார். இவருடன் திமுக நிர்வாகிகள் பலரும் வந்துள்ளனர். தினசரி சங்கரன் கோவிலானது மதியம் 12லிருந்து 1 மணியளவில் நடை மூடப்பட்டு மாலை 4 மணியளவில் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சேகர்பாபுவின் மனைவி சந்திரா நடை மூடும் நேரத்தை தாண்டி வந்துள்ளார். கோவில் நிர்வாகம் ஆகம விதிகளை மீறி நடையை இவருக்காக திறந்து வைத்துள்ளது. எப்படி அரசியல் நிர்வாகிகளுக்காக இப்படி ஆகம விதிகளை மீறலாம் என்று இவர் மீது புகார் எழுந்துள்ளது. இது ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது அரசு அப்படியே மூடி மறைத்துவிடுமா என்பது குறித்து பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆளும் கட்சியானது பல சூழலில் அதிகாரத் தன்மையை மீறி நடந்துக் கொள்கிறது.
இதேபோல தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் ரீதியான வழக்கில் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் போராட 2 வாரத்திற்கு முன் அனுமதி கேட்டிருக்க வேண்டும் எனக் கூறி போராட அனுமதி வழங்ககாமல் மறுத்து விட்டு, தன் கட்சிக்கு மட்டும் உடனடி அனுமதியை வழங்கினர். இது பெருமளவு சர்ச்சையானது.